About

Tamil Timeline

TamilTimeline.com brings you a chronological, interactive journey through the history of Tamils — from ancient civilizations and Sangam literature, through age-old kingdoms like the Chera, Chola, and Pandya, to modern cultural achievements. Our timeline combines historical research with engaging visuals and contextual stories to make history accessible for learners, researchers, and enthusiasts alike.

தமிழர்களின் வரலாறு, நீண்டதும் செழுமையானதும் தொடர்ச்சியானதுமாகும். அண்மையில், சிவகளை, மயிலாடும்பாறை முதலான தொல்லியல்க் களங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள், தமிழ்நாகரிகத்தின் தொன்மையை, குறிப்பாக அதன் இரும்புக்காலத்தை, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக நிறுவுகின்றன. சிவகளையில் கிடைத்த சான்றுகளின்படி, தமிழ்நாட்டின் இரும்புக்காலம் கி.மு. 3345இக்கும் மேற்பட்டுப் பழமையானது என்பது நிறுவப்பட்டுள்ளது.

இந்த ஆவணம், தொன்மைக் காலம் முதல் தற்காலம் வரை, தமிழர்களின் வரலாற்றை நிறுவுகின்ற முக்கிய அரசியல், இலக்கிய, சமூக, தொழில்நுட்ப மைல்கற்களின் காலவரிசைப்படி ஒரு கட்டமைக்கப்பட்ட கண்ணோட்டத்தை வழங்குகிறது. விரைவில் ஒவ்வொரு நிகழ்விற்குமான படங்கள், ஒலித்துண்டுகள், காணொலிகள் முதலானவை இணைக்கப்படும்.

வரலாறு வெறும் நினைவன்று, நமது வாழ்வியல் – தமிழர் மரபு!